மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

Podcast available on :  Apple  Spotify

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

Podcast available on :  Apple  Spotify

ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!

Podcast available on:   Apple     Spotify

மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம். 1. கரும்பு ஆலைகள்  வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித”மதுரைக்காஞ்சியின்“மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள். மதுரை மாநகர் எப்படி இருந்தது? 782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர். புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699) வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து”மதுரைக்காஞ்சி“மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!

இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம். தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!! சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா? சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே. கடந்த”ஓணம்“ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.