Podcast available on : Apple Spotify
Tag Archives: புறநானூறு
மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்
Podcast available on : Apple Spotify
அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்
Podcast available on : Apple Spotify
மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்
2024ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் இரண்டு திருவிழாக்கள்- ஒன்று மதுரை மாநகரத்து மீனாட்சித் திருமணம்; மற்றொன்று இந்தியத் திருநாட்டின் மக்களாட்சித் திருவிழா. மேளச்சத்தம், பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கியில் தமிழ்முழக்கம் என்று ஆரவாரத்துடன் காத்திருப்பவர் ஆற்றிலிறங்கும் கள்ளழகர் மட்டுமல்ல; தேர்தல் களமிறங்கும் அரசியல்வாதிகளும்தான். போராட்டம், பட்டிமன்றம், கலந்துரையாடல், பரப்புரை என்று பலவாறாகப் பேசிப்பேசித் தேர்தல் நாட்கள் நெருங்கிவிட்டன. ஏப்ரல் மாதம்முதல் தேர்தல் காணும் இந்தியாவின் அரசியல் நிலையைப் பற்றித் தெளிவாகப் பேசத் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, நாம் இங்கு அலசப்போவது”மக்களாட்சியிலும்“மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்
தமிழால் இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திங்கள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஆண்டு முழுதும் சமயம் சார்ந்த, புராணக் கதைகளோடு இணைந்த பல்வேறு பண்டிகைகள் வந்து போகும். ஆனால், பொங்கல் என்ற ஒரு சொல் போதும், தமிழ் மண்ணின் மணம் பரப்பும் எண்ணில்லாக் காட்சிகள் நம் நினைவலைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மணம் உண்டா என்றால், ‘பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள்”மண்மணம்“மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்
அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள். ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது. மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும்,”அன்னையர்நாள்“அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்”-ஐ படிப்பதைத் தொடரவும்.