கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’

இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்! அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்வென்றெரி முரசின் வேந்தர்எம்குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே(புறநானூறு 112) தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா? அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம். என் வலையொலிப் பக்கத்திற்குப் பெயர் கொடுத்த பாடல், புறநானூறில் 112″கற்றனைத்தூறும்“கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்

வலையொலிப் பதிவு கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும்பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கும் குளிரிள நீரும்இனியன என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் !(பாரதிதாசனார், தமிழின் இனிமை) என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன். என் வலையொலிப் பக்கத்தின் முதல்”‘அற்றைத்“‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.