மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்

Podcast available on :  Apple  Spotify

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்

Podcast available on:   Apple     Spotify

மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்

2024ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் இரண்டு திருவிழாக்கள்- ஒன்று மதுரை மாநகரத்து மீனாட்சித் திருமணம்; மற்றொன்று இந்தியத் திருநாட்டின் மக்களாட்சித் திருவிழா. மேளச்சத்தம், பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கியில் தமிழ்முழக்கம் என்று ஆரவாரத்துடன் காத்திருப்பவர் ஆற்றிலிறங்கும் கள்ளழகர் மட்டுமல்ல; தேர்தல் களமிறங்கும் அரசியல்வாதிகளும்தான். போராட்டம், பட்டிமன்றம், கலந்துரையாடல், பரப்புரை என்று பலவாறாகப் பேசிப்பேசித் தேர்தல் நாட்கள் நெருங்கிவிட்டன. ஏப்ரல் மாதம்முதல் தேர்தல் காணும் இந்தியாவின் அரசியல் நிலையைப் பற்றித் தெளிவாகப் பேசத் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, நாம் இங்கு அலசப்போவது”மக்களாட்சியிலும்“மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது. இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு. இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா? பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும்”‘புலம்பெயர்தல்’“‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.