Podcast available on : Apple Spotify
Tag Archives: சங்க இலக்கியம்
மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்
Podcast available on : Apple Spotify
அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்
Podcast available on : Apple Spotify
ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!
Podcast available on: Apple Spotify
பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி!
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 4 சங்க இலக்கியம், ஊர் மக்களின் துணிகளைத் துவைத்துத் தூய்மையாக்கி, கஞ்சியிட்டுப் பொலிவேற்றித் தந்த பணியைத் தொழில்முறையாகப் பெண்கள் செய்ததைக் காட்டுகிறது. அப்பெண்கள் புலைத்தியர் என்றழைக்கப்பட்டனர். நான் கண்டவரையில், பணிபுரியும் இடத்திலிருந்து நேரடியாகப் புலைத்தியைச் சங்கப் பாடல்கள் படம்பிடித்துக் காட்சிப்படுத்தவில்லை. எனினும் அகம்புறமென்று சூழல்வேறுபாடின்றி பல்வேறிடங்களில், புலைத்தியும் துணிகளுக்கு அவள் பயன்படுத்திய கஞ்சியும் ஒப்புநோக்கப்படுகின்றன; அவளுடைய நற்பண்புகளும் பசை தோய்ந்த விரல்களும் நினைவுகூறப்படுகின்றன. ‘கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு’”பசைகொல்“பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்
தமிழின் தொன்மை இலக்கியங்களான எட்டுத் தொகை-பத்துப் பாட்டு நூல்கள், அக்காலத்தே செழித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் அதன் சிறப்புக்களையும் எண்ணியெண்ணிக் களிப்படையச் செய்பவை; படிக்கப் படிக்கச் சிந்திக்கத் தூண்டுபவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணின் நிகழ்வுகளை நேரலைபோல நமக்குக் காட்டுபவை. சங்க இலக்கியங்கள் மீது அதைப் படிப்பவர்களுக்குத் தீராத ஈர்ப்பு வருவது எதனால்? அவரவர் பார்வைக்கேற்ப காரணங்கள் பலவாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதன்மையான காரணம், அவை உங்களையும் என்னையும் போன்ற இயல்பான மக்களின் அன்றாட”மதுரைக்காஞ்சி“மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்
அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள். ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது. மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும்,”அன்னையர்நாள்“அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!
இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம். தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!! சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா? சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே. கடந்த”ஓணம்“ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.