சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1

Podcast available on :  Apple  Spotify

அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்

Podcast available on :  Apple  Spotify

பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்

Podcast available on :  Apple  Spotify

சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1

சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 5 (1) இயற்கையோடியைந்த சங்கத்தமிழர் வாழ்வில், பூக்களுக்குத் தனிப்பேரிடமுண்டு. மக்கள் வாழ்வோடிணைந்த பூக்கள்பற்றி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஒவ்வொரு திணையிலும் விளைந்த பல்வகைப் பூக்கள், அவற்றின் தோற்றம், நிறம், மேலும் விளக்கிட எண்ணிலடங்கா உவமைகள், மன்னர் தொடங்கிப் பெண்கள் ஆண்கள் குழந்தைகளென்று அவற்றைச் சூடியவர்கள், சூடிய சூழல், பூச்சூடியதோடு மாலையாய் அணிந்தமை, பூக்களைக் கோக்க எவற்றைப் பயன்படுத்தினார்கள்- என்று தகவல் தரும் சங்கப்பாடல்கள் வெறும் பாடல்களல்ல- வரலாற்று ஆவணங்கள். சூடத்தகுந்த பூக்கள்”சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்-“சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்

அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள். ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது. மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும்,”அன்னையர்நாள்“அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்

சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 1 ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு மகளிர் நாள் உருவான வரலாறு பற்றி ஐ.நா.வின் இணையதளம் என்ன சொல்கிறது? முதன்முதலில் 1848இல் அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில் சமூக, பொருளாதார, அரசியல், மதம் சார்ந்த உரிமைகள் கோரிப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அடுத்து, 1908ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் நாள், துணி ஆலைகளில் பணியாற்றிய பெண்கள், தங்கள் பணிச்சூழலில் மாற்றம் வேண்டிப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.”பன்னாட்டு“பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.