அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ் (மக்கட்பேறு 04) தம்முடைய மக்களின் சிறு கைகளால் பிசைந்து கூழாக்கப்பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிடச் சுவையானதாம். மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (மக்கட்பேறு 05 ) தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அவர்களின் மழலைமொழி கேட்பது, செவிக்கு இன்பத்தையும் வழங்கும். குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர் (மக்கட்பேறு 06) தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை உணராதவரே,”வள்ளுவம்“வள்ளுவம் போற்றுவோம்; மக்களைப் பேணுவோம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Category Archives: Podcast
தாய்லாந்தில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயனும். ஈழத் துணவும் காழகத் தாக்கமும்அரியவும் பெரியவும் நெரிய ஈண்டிவளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு(பட்டினப்பாலை 184-193) இதென்ன, பலப்பலப் பொருட்களின் நீண்ட பட்டியல்போல இருக்கிறதே என்கிறீர்களா? ஆம், இவையனைத்தும் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் பற்பல நாடுகளில் இருந்து வந்து குவிந்திருக்கும் பண்டங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சோழநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்”தாய்லாந்தில்“தாய்லாந்தில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
நுனி நாக்குத் தமிழ் சரியா? தொல்காப்பிய வழி தமிழ் ஒலிகள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம்(ஔவையார்) என்று ஔவையார் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். சித்திரம் வரைவது கைப்பழக்கம்; செம்மையாகத் தமிழ்ப் பேசுவது- நாவின் பழக்கம்; எக்காலமும் பயன்படுமாறு உள்ளிருத்திக் கொள்ளும் கல்வி – மனப்பழக்கமாம். இன்று நாம் பேசும் தமிழ், பெரும்பாலும் கலப்புத் தமிழ்தான். ஆங்கிலச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவதே இயல்பான பேச்சுவழக்கு என்று பலரும் கருதும் வருந்தத்தக்கச் சூழலைக் காண்கிறோம்.”நுனி“நுனி நாக்குத் தமிழ் சரியா? தொல்காப்பிய வழி தமிழ் ஒலிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்
யாயும் ஞாயும் யாராகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே (செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை 40) எட்டுத் தொகை இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 40ஆவது பாடல் இது. சென்ற பகிர்வில் கண்ட, அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ இன்றுவரை நம்மிடையே உலவி வருவது போலவே, கவிஞர்களை மகிழ்வுபடுத்தும் மற்றொரு சொற்றொடர் உண்டு. அதுதான், ‘செம்புலப்பெயல்நீர்’ – இதன் பொருள் – செம்மண் நிலத்தில் விழுந்த நீர்த்துளி . என் தாயும் உன் தாயும் யார் யாரோ, தந்தைமார் இருவரும் உறவினர் அல்லர்; நானும் நீயும் முன்பின் அறியாதவர்கள். அப்படி இருக்க, செம்புலத்தில் விழுந்த நீரைப்போல,”செம்புலப்“செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’
இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்! அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்வென்றெரி முரசின் வேந்தர்எம்குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே(புறநானூறு 112) தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா? அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம். என் வலையொலிப் பக்கத்திற்குப் பெயர் கொடுத்த பாடல், புறநானூறில் 112″கற்றனைத்தூறும்“கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’”-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்
வலையொலிப் பதிவு கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும்பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கும் குளிரிள நீரும்இனியன என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் !(பாரதிதாசனார், தமிழின் இனிமை) என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன். என் வலையொலிப் பக்கத்தின் முதல்”‘அற்றைத்“‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.