Podcast available on : Apple Spotify
Category Archives: Podcast
கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’
Podcast available on : Apple Spotify
‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்
Podcast available on: Apple Spotify
சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 5 (1) இயற்கையோடியைந்த சங்கத்தமிழர் வாழ்வில், பூக்களுக்குத் தனிப்பேரிடமுண்டு. மக்கள் வாழ்வோடிணைந்த பூக்கள்பற்றி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஒவ்வொரு திணையிலும் விளைந்த பல்வகைப் பூக்கள், அவற்றின் தோற்றம், நிறம், மேலும் விளக்கிட எண்ணிலடங்கா உவமைகள், மன்னர் தொடங்கிப் பெண்கள் ஆண்கள் குழந்தைகளென்று அவற்றைச் சூடியவர்கள், சூடிய சூழல், பூச்சூடியதோடு மாலையாய் அணிந்தமை, பூக்களைக் கோக்க எவற்றைப் பயன்படுத்தினார்கள்- என்று தகவல் தரும் சங்கப்பாடல்கள் வெறும் பாடல்களல்ல- வரலாற்று ஆவணங்கள். சூடத்தகுந்த பூக்கள்”சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்-“சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1”-ஐ படிப்பதைத் தொடரவும்.
பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி!
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 4 சங்க இலக்கியம், ஊர் மக்களின் துணிகளைத் துவைத்துத் தூய்மையாக்கி, கஞ்சியிட்டுப் பொலிவேற்றித் தந்த பணியைத் தொழில்முறையாகப் பெண்கள் செய்ததைக் காட்டுகிறது. அப்பெண்கள் புலைத்தியர் என்றழைக்கப்பட்டனர். நான் கண்டவரையில், பணிபுரியும் இடத்திலிருந்து நேரடியாகப் புலைத்தியைச் சங்கப் பாடல்கள் படம்பிடித்துக் காட்சிப்படுத்தவில்லை. எனினும் அகம்புறமென்று சூழல்வேறுபாடின்றி பல்வேறிடங்களில், புலைத்தியும் துணிகளுக்கு அவள் பயன்படுத்திய கஞ்சியும் ஒப்புநோக்கப்படுகின்றன; அவளுடைய நற்பண்புகளும் பசை தோய்ந்த விரல்களும் நினைவுகூறப்படுகின்றன. ‘கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு’”பசைகொல்“பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சங்கப் பாடல்களில் கள் அடு மகளிர்/ அரியலாட்டியர்
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 3 இன்றும் நம் நாட்டின் பல மாநில அரசுகளுக்குப் பொருளீட்டும் களஞ்சியமாக உதவுவது மது விற்பனை. தென்மாநிலங்கள் ஐந்து மட்டுமே, நாட்டின் மொத்த மதுபானப் பயன்பாட்டில் 45 விழுக்காட்டைத் தொட்டுவிடுவதாக 2021ஆம் ஆண்டின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. இன்று அரசுப் பெட்டகங்களை நிரப்பும் தொழில்துறைகளில் ஒன்றில், தம் காலத்தில் சங்ககாலப் பெண்கள் எப்படி ஈடுபட்டார்கள் என்பது குறித்த சுவையான செய்திகளைத் தருவதே இப்பதிவின் நோக்கம். அன்றி, குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதோ, அத்தொழில் செய்பவர்களைப் போற்றுவதோ”சங்கப்“சங்கப் பாடல்களில் கள் அடு மகளிர்/ அரியலாட்டியர் “-ஐ படிப்பதைத் தொடரவும்.
உழைத்துப் பொருளீட்டிய சங்க காலப் பெண்கள்
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 2 ‘சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்’ பற்றிய முந்தைய பதிவில், மதுரைக் காஞ்சியில் ஊர் அடங்கியபின் தம் கடையை அடைத்து உறங்கச் சென்ற மதுரை மாநகரத்துப் பெண்களைப் பார்த்தோம். நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொண்டு- இடத்தைத் தெரிவு செய்தபின் கடையமைத்து- பொருட்களை வாங்கி விற்று- கணக்கு வழக்குகளைக் கையாண்டு வணிகம் செய்தவர்கள் இவர்கள். ஓரிடத்தில் அமர்ந்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொண்டுப் பொருளீட்டிய இந்தப் பெண்கள் சமூகப் பொருளாதாரத்தின் சீரான இயக்கத்திற்கு உதவினர்.”உழைத்துப்“உழைத்துப் பொருளீட்டிய சங்க காலப் பெண்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்
2024ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் இரண்டு திருவிழாக்கள்- ஒன்று மதுரை மாநகரத்து மீனாட்சித் திருமணம்; மற்றொன்று இந்தியத் திருநாட்டின் மக்களாட்சித் திருவிழா. மேளச்சத்தம், பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கியில் தமிழ்முழக்கம் என்று ஆரவாரத்துடன் காத்திருப்பவர் ஆற்றிலிறங்கும் கள்ளழகர் மட்டுமல்ல; தேர்தல் களமிறங்கும் அரசியல்வாதிகளும்தான். போராட்டம், பட்டிமன்றம், கலந்துரையாடல், பரப்புரை என்று பலவாறாகப் பேசிப்பேசித் தேர்தல் நாட்கள் நெருங்கிவிட்டன. ஏப்ரல் மாதம்முதல் தேர்தல் காணும் இந்தியாவின் அரசியல் நிலையைப் பற்றித் தெளிவாகப் பேசத் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, நாம் இங்கு அலசப்போவது”மக்களாட்சியிலும்“மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்
சென்ற பதிவில் கண்ட பொங்கல் காட்சியின் தொடர்ச்சிபோலவே, இன்றும் தொடரும் ஏறு தழுவும் வீர விளையாட்டின் சுவைமிகு காட்சிகளை இங்கு நாம் பார்க்கப் போகிறோம். பொங்கலும் சரி அதைத் தொடரும் ஏறு தழுவலும் சரி, ஊர்க்கூடி இழுக்கும் தேரினைப்போல ஊரார் பங்கேற்றுப் பொதுமக்கள் ஒன்றுகூடித் தொடர்ந்துக் கொண்டாடிவரும் தொல்தமிழர் விழாக்கள். அப்படிப்பட்ட தொல்தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் ஏறு தழுவல் இன்றுவரைத் தொடரும் அழகைக் காட்டுகிறது எட்டுத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை. போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில்”ஏறு“ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்
தமிழால் இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திங்கள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஆண்டு முழுதும் சமயம் சார்ந்த, புராணக் கதைகளோடு இணைந்த பல்வேறு பண்டிகைகள் வந்து போகும். ஆனால், பொங்கல் என்ற ஒரு சொல் போதும், தமிழ் மண்ணின் மணம் பரப்பும் எண்ணில்லாக் காட்சிகள் நம் நினைவலைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மணம் உண்டா என்றால், ‘பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள்”மண்மணம்“மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.