சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம். 1. கரும்பு ஆலைகள் வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித”மதுரைக்காஞ்சியின்“மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Category Archives: எண்ணங்களின் எதிரொலி
மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்
முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள். மதுரை மாநகர் எப்படி இருந்தது? 782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர். புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699) வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து”மதுரைக்காஞ்சி“மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்
தமிழின் தொன்மை இலக்கியங்களான எட்டுத் தொகை-பத்துப் பாட்டு நூல்கள், அக்காலத்தே செழித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் அதன் சிறப்புக்களையும் எண்ணியெண்ணிக் களிப்படையச் செய்பவை; படிக்கப் படிக்கச் சிந்திக்கத் தூண்டுபவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணின் நிகழ்வுகளை நேரலைபோல நமக்குக் காட்டுபவை. சங்க இலக்கியங்கள் மீது அதைப் படிப்பவர்களுக்குத் தீராத ஈர்ப்பு வருவது எதனால்? அவரவர் பார்வைக்கேற்ப காரணங்கள் பலவாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதன்மையான காரணம், அவை உங்களையும் என்னையும் போன்ற இயல்பான மக்களின் அன்றாட”மதுரைக்காஞ்சி“மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்
அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள். ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது. மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும்,”அன்னையர்நாள்“அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 1 ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு மகளிர் நாள் உருவான வரலாறு பற்றி ஐ.நா.வின் இணையதளம் என்ன சொல்கிறது? முதன்முதலில் 1848இல் அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில் சமூக, பொருளாதார, அரசியல், மதம் சார்ந்த உரிமைகள் கோரிப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அடுத்து, 1908ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் நாள், துணி ஆலைகளில் பணியாற்றிய பெண்கள், தங்கள் பணிச்சூழலில் மாற்றம் வேண்டிப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.”பன்னாட்டு“பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாமல்லரும் மகாபலியும்
மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பற்றிச் சென்ற பதிவில் பார்த்தோம். அப்படிப்பட்ட வரலாற்றுப் பிழைகளில் முதலில் மாமல்லருக்கும் மகாபலிக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். புராணப் பாத்திரமான மகாபலிக்கும் தமிழக வரலாற்றில் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரரான மாமல்லருக்கும் என்ன தொடர்பு? மல்லைக் கடலோரம் பல்லவர் சிற்பக்கலைச் சாதனைகள் அலையொலியோடு எதிரொலிக்க இறுமாந்து நிற்கும் அழகுப் பெட்டகம் – மாமல்லபுரமா மகாபலிபுரமா? பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில் கணங்களியங்கு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்”மாமல்லரும்“மாமல்லரும் மகாபலியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்
சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் துப்பாக்கி திரைப்படம் ஒளிபரப்பி இருந்தார்கள். அலைவரிசையைக் கவனிக்கவில்லை. உற்று நோக்கியபோது நடிகர் விஜய் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அட.. என்னடா இது என்று ஆர்வம் கூடியது. பெயரைப் பார்த்தால் – ‘Thuppakki – Indian Soldier Never On Holiday’ என்று வந்தது. ஓ.. மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்று புரிந்துகொண்டேன். பின்னொருநாள், இந்தி அலைவரிசை வழங்கிக்கொண்டிருந்த படமொன்றைப் பார்க்க அமர்ந்தேன். ஏற்கனவே பார்த்த படம்போல் இருந்தது. மூளையைத் தீட்டித் தேடியதில் அதே”மாறிய“மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!
இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம். தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!! சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா? சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே. கடந்த”ஓணம்“ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது. இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு. இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்? ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா? பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும்”‘புலம்பெயர்தல்’“‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்
யாயும் ஞாயும் யாராகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே (செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை 40) எட்டுத் தொகை இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 40ஆவது பாடல் இது. சென்ற பகிர்வில் கண்ட, அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ இன்றுவரை நம்மிடையே உலவி வருவது போலவே, கவிஞர்களை மகிழ்வுபடுத்தும் மற்றொரு சொற்றொடர் உண்டு. அதுதான், ‘செம்புலப்பெயல்நீர்’ – இதன் பொருள் – செம்மண் நிலத்தில் விழுந்த நீர்த்துளி . என் தாயும் உன் தாயும் யார் யாரோ, தந்தைமார் இருவரும் உறவினர் அல்லர்; நானும் நீயும் முன்பின் அறியாதவர்கள். அப்படி இருக்க, செம்புலத்தில் விழுந்த நீரைப்போல,”செம்புலப்“செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.