Podcast available on : Apple Spotify
Author Archives: attraithingal
கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’
Podcast available on : Apple Spotify
‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்
Podcast available on: Apple Spotify
திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்!
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்- 3 (கோவிலூர் மடாலயம் வெளியிடும் ‘திருநெல்லை’ ஆன்மீக மாத இதழில் பதிவிடப்பட்ட வரலாற்றாய்வுத் தொடர்) அப்பருடைய வாழ்க்கையை எழுதத் தொடங்கும் சேக்கிழார், ‘திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்’ என்று முதல்பாடலில் குறிக்கிறார். திருத்தொண்டின் அகண்டபொருளைத் தம் வாழ்வாலும் பதிகங்களாலும் உலகிற்கு விளக்கிய வாகீசரை அறிமுகப்படுத்த, எவ்வளவு துல்லியமான சொல்தேர்வு! அப்பர், ‘தொண்டுசெய்து என்றும் சோற்றுத்துறையார்க்கே உண்டுநீ பணிசெய் மடநெஞ்சமே’(5.033.10) என்று முதலில், தொண்டின் சிறப்பைத் தம் நெஞ்சுக்குத்”திருத்தொண்டின்“திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 5 (1) இயற்கையோடியைந்த சங்கத்தமிழர் வாழ்வில், பூக்களுக்குத் தனிப்பேரிடமுண்டு. மக்கள் வாழ்வோடிணைந்த பூக்கள்பற்றி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஒவ்வொரு திணையிலும் விளைந்த பல்வகைப் பூக்கள், அவற்றின் தோற்றம், நிறம், மேலும் விளக்கிட எண்ணிலடங்கா உவமைகள், மன்னர் தொடங்கிப் பெண்கள் ஆண்கள் குழந்தைகளென்று அவற்றைச் சூடியவர்கள், சூடிய சூழல், பூச்சூடியதோடு மாலையாய் அணிந்தமை, பூக்களைக் கோக்க எவற்றைப் பயன்படுத்தினார்கள்- என்று தகவல் தரும் சங்கப்பாடல்கள் வெறும் பாடல்களல்ல- வரலாற்று ஆவணங்கள். சூடத்தகுந்த பூக்கள்”சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்-“சங்கக் காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர்- 1”-ஐ படிப்பதைத் தொடரவும்.
பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி!
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 4 சங்க இலக்கியம், ஊர் மக்களின் துணிகளைத் துவைத்துத் தூய்மையாக்கி, கஞ்சியிட்டுப் பொலிவேற்றித் தந்த பணியைத் தொழில்முறையாகப் பெண்கள் செய்ததைக் காட்டுகிறது. அப்பெண்கள் புலைத்தியர் என்றழைக்கப்பட்டனர். நான் கண்டவரையில், பணிபுரியும் இடத்திலிருந்து நேரடியாகப் புலைத்தியைச் சங்கப் பாடல்கள் படம்பிடித்துக் காட்சிப்படுத்தவில்லை. எனினும் அகம்புறமென்று சூழல்வேறுபாடின்றி பல்வேறிடங்களில், புலைத்தியும் துணிகளுக்கு அவள் பயன்படுத்திய கஞ்சியும் ஒப்புநோக்கப்படுகின்றன; அவளுடைய நற்பண்புகளும் பசை தோய்ந்த விரல்களும் நினைவுகூறப்படுகின்றன. ‘கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு’”பசைகொல்“பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
அப்பரும் மகேந்திரரும் – பண்பாட்டுப் புத்துயிர்ப்பில் இரு ஆளுமைகள்
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் -2 (கோவிலூர் மடாலயம் வெளியிடும் ‘திருநெல்லை’ ஆன்மீக மாத இதழில் பதிவிடப்பட்ட வரலாற்றாய்வுத் தொடர்) இலக்கியங்கள் வாயிலாக, சங்க காலம் தொடங்கிக் காப்பிய காலம் கடந்துப் பத்திமை காலத்துள் சுவைமிகு பயணத்தைத் தொடர்கையில், ஆற்றல்மிகு தமிழ்ப் படைப்பாளர்கள் சமயம் சார்ந்த தெளிவான வரலாற்றுப் பாதையையும் பார்வையையும் நமக்கு வழங்குகிறார்கள். வேலன் வெறியாட்டும், கொற்றவை வழிபாடும் வீரமிகு ஆற்றலுடன் நடந்தேறியதோடு பெளத்த பள்ளியும், சமணப் பள்ளியும், அந்தணர் பள்ளியும் அவரவர் முறைகளில்”அப்பரும்“அப்பரும் மகேந்திரரும் – பண்பாட்டுப் புத்துயிர்ப்பில் இரு ஆளுமைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிந்தையில் சிவமும் வாக்கினில் தமிழும் வைத்த நாவுக்கரசர்
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் -1 (கோவிலூர் மடாலயம் வெளியிடும் ‘திருநெல்லை’ ஆன்மீக மாத இதழில் பதிவிடப்பட்ட வரலாற்றாய்வுத் தொடர்) தமிழக வரலாற்றில், சைவம் தழைத்த காலம் என்றும் சைவ மறுமலர்ச்சிக் காலம் என்றும் பத்திமைக் காலத்தை ஆய்வாளர்கள் குறிப்பர். அவ்வாறெனில், சிவனை வழிபடும் வழக்கம் பத்திமைக் காலத்துக்கு முன்பே இருந்தது தெரிகிறது. தொல்காப்பியக் காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களும் முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை”சிந்தையில்“சிந்தையில் சிவமும் வாக்கினில் தமிழும் வைத்த நாவுக்கரசர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சங்கப் பாடல்களில் கள் அடு மகளிர்/ அரியலாட்டியர்
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 3 இன்றும் நம் நாட்டின் பல மாநில அரசுகளுக்குப் பொருளீட்டும் களஞ்சியமாக உதவுவது மது விற்பனை. தென்மாநிலங்கள் ஐந்து மட்டுமே, நாட்டின் மொத்த மதுபானப் பயன்பாட்டில் 45 விழுக்காட்டைத் தொட்டுவிடுவதாக 2021ஆம் ஆண்டின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. இன்று அரசுப் பெட்டகங்களை நிரப்பும் தொழில்துறைகளில் ஒன்றில், தம் காலத்தில் சங்ககாலப் பெண்கள் எப்படி ஈடுபட்டார்கள் என்பது குறித்த சுவையான செய்திகளைத் தருவதே இப்பதிவின் நோக்கம். அன்றி, குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதோ, அத்தொழில் செய்பவர்களைப் போற்றுவதோ”சங்கப்“சங்கப் பாடல்களில் கள் அடு மகளிர்/ அரியலாட்டியர் “-ஐ படிப்பதைத் தொடரவும்.
உழைத்துப் பொருளீட்டிய சங்க காலப் பெண்கள்
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 2 ‘சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்’ பற்றிய முந்தைய பதிவில், மதுரைக் காஞ்சியில் ஊர் அடங்கியபின் தம் கடையை அடைத்து உறங்கச் சென்ற மதுரை மாநகரத்துப் பெண்களைப் பார்த்தோம். நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொண்டு- இடத்தைத் தெரிவு செய்தபின் கடையமைத்து- பொருட்களை வாங்கி விற்று- கணக்கு வழக்குகளைக் கையாண்டு வணிகம் செய்தவர்கள் இவர்கள். ஓரிடத்தில் அமர்ந்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொண்டுப் பொருளீட்டிய இந்தப் பெண்கள் சமூகப் பொருளாதாரத்தின் சீரான இயக்கத்திற்கு உதவினர்.”உழைத்துப்“உழைத்துப் பொருளீட்டிய சங்க காலப் பெண்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.