ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்

சென்ற பதிவில் கண்ட பொங்கல் காட்சியின் தொடர்ச்சிபோலவே, இன்றும் தொடரும் ஏறு தழுவும் வீர விளையாட்டின் சுவைமிகு காட்சிகளை இங்கு நாம் பார்க்கப் போகிறோம். பொங்கலும் சரி அதைத் தொடரும் ஏறு தழுவலும் சரி, ஊர்க்கூடி இழுக்கும் தேரினைப்போல ஊரார் பங்கேற்றுப் பொதுமக்கள் ஒன்றுகூடித் தொடர்ந்துக் கொண்டாடிவரும் தொல்தமிழர் விழாக்கள். அப்படிப்பட்ட தொல்தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் ஏறு தழுவல் இன்றுவரைத் தொடரும் அழகைக் காட்டுகிறது எட்டுத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை. போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில்”ஏறு“ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்

தமிழால் இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திங்கள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஆண்டு முழுதும் சமயம் சார்ந்த, புராணக் கதைகளோடு இணைந்த பல்வேறு பண்டிகைகள் வந்து போகும். ஆனால், பொங்கல் என்ற ஒரு சொல் போதும், தமிழ் மண்ணின் மணம் பரப்பும் எண்ணில்லாக் காட்சிகள் நம் நினைவலைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மணம் உண்டா என்றால், ‘பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள்”மண்மணம்“மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.